search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    அண்ணா தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

    • அண்ணா தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நூற்பாலை மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்யக்கோரி நூற்பாலை மேலாளரிடம் மனு அளித்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இங்கு ஊழியராக பணியாற்றி வந்தவர் லட்சுமி (வயது48), மாற்றுத்திற னாளி. இவர் கடந்த மாதம் 31-ந் தேதி வேலையை முடித்து விட்டு, நூற்பாலைக்கு வெளியே வந்தபோது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்கா மல் கடுமையான பணிகள் ஒதுக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர் என்றும், மாற்றுத்திறனாளி பெண் லட்சுமி மரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மேற்பார்வையாளர் கொடுத்த பணி சுமை தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அவரை பணி நீக்கம் செய்ய கோரி அண்ணா தொழிற் சங்கம் சார்பில் நூற்பாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். அச்சங்குளம் நூற் பாலை அண்ணா தொழிற்சங்க தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கர்ணன், ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, முத்தையா, குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் நூற்பாலை மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்யக்கோரி நூற்பாலை மேலாளரிடம் மனு அளித்தனர்.

    Next Story
    ×