search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு மீண்டும் திறப்பு
    X

    அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு மீண்டும் திறப்பு

    • அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஜூன் முதல் கண்டறியப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 6 பேர் உள்பட 78 பேர் நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரியபட்டினம் அருகே கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டவர்களை ஏற்றி வந்த 40 வயது ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் இருந்தார்.இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று முதன் முதலாக மீண்டும் திறக்கப்பட்ட 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    இங்கு 2 டாக்டர்கள், நர்சுகள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற அரசு அறிவித்துள்ள தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    இதனை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் தொற்று அதிகரித்து விடும். இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×