search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறப்பு
    X

    விரகனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறப்பு

    • விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • விவசாயம் பாதிப்படைந்து நெற்பயிர்கள் கருகி பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், தற்போது தண்ணீர் திறக்கப்படுவது வரவேற்க த்தக்கது என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வானம் பார்த்த பகுதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போதிய பருவ மழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி, எள் பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனையடைந்தனர்.

    அபிராமம் பகுதிக்கு நீராதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப் படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பல முறை வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. கிருதுமால் நதியை தூர்வாரியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பலமுறை மனு அளித்தும் அரசின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இது குறித்து விவசாயி முனியாண்டி கூறுகையில், உடையநாதபுரம், நந்தி சேரி, காடனேரி, நீர் தாண்ட அச்சங்குளம், போத்தநதி, பாப்பனம் மற்றும் அபிராமம் சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி, எள் பயிர்கள் கருகி விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

    தற்போது மதுரை விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதியில் திறந்து விடப்படும் நீரால் அபிராமம் கண்மாய் தண்ணீர் நிரம்புவதால் குடிநீர் தேவைக்காகவும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார்.

    முல்லைபெரியாறு-வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநா தபுரம் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இங்கு விவசாயம் பாதிப்படைந்து நெற்பயிர்கள் கருகி பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், கிருது மால் நதிமூலம் தற்போது தண்ணீர் திறக்கப்படுவது வரவேற்க த்தக்கது.

    எங்கள் கோரிக்கையை ஏற்று நவம்பர் மாதம் கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்திருந்தால் நெற்பயிர்கள் கருகி இருக்காது. தற்போது தண்ணீர் திறப்பதால் குடிநீர் தேவைக்கும், நிலத்தடி நீரும் உயரும். கிருதுமால் நதிமூலம் தண்ணீர் கொண்டுவர பல கட்ட போராட்டங்கள், விளக்க கூட்டங்கள் நடத்தி ஒத்துழைப்பு தந்த விவசாயிகள், பொதுமக்கள், அருணாசலம் உள்ளிட்ட சமூக சேவகர்கள் மற்றும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், நீர்வள ஆதார அமைப்பிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

    Next Story
    ×