என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- முதுகுளத்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
- ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொந்தம்புலி கிராமத்திற்கு 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவித்து வந்தனர். சித்திரங்குடி-பொந்தம் புலி கிராமத்திற்கு இடையில் 150 மீட்டர் தூரம் மட்டுமே அரசு புறம்போக்கு நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை அகற்ற முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பரமக்குடி சப்-கலெக்டர்அப்தாப் ரசூல் தலைமையில் தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏனாதி ஊராட்சி பொந்தம்புலி கிராமத்திற்கு முதுகுளத்தூர்-கமுதி நெடுஞ்சாலையில் இருந்து சித்திரங்குடி கிராமத்தில் 150 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது. இதில் அதன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 'புறம்போக்கில் இருந்த புளிய மரத்தை ஏலம்விட சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏனாதி கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், சித்திரங்குடி வி.ஏ.ஓ. பழனி உள்பட வருவாய்த்துறையினர் இருந்தனர்.