search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடை மோசடியை தடுக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    X

    எடை மோசடியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    • எடை மோசடியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    • வாரச் சந்தைக்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இதில் வெளி மாவட் டங்களில் இருந்து சந்தைக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது. வீட்டுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்க முடிவதால் வாரச் சந்தைக்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

    வாரச் சந்தையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து பொருள்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பழங்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் விலையை குறைத்து விற்பதாக கூறி, எடை குறைந்த பொருட்களை விற்பனை செய்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    விலை குறைவாக உள்ளதே என்று கிராம பொதுமக்களும் இந்த சந்தையில் பொருள்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இவ்வாறு வாங்கிச் செல்லும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாரச் சந்தையில் ஆய்வு செய்து உடனடியாக மோசடியைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நுகர்வோர் அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் வாரச் சந்நுதையில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் அனைத்து வியாபாரிகளும் டிஜிட்டல் தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும், வாரச் சந்தையின் போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மோசடி எடையளவுகளை பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×