என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொண்டியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க கோரிக்கை
- தொண்டியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- விளையாட ஊஞ்சல் கிடைக்காமல் பலர் மணலில் உட்கார்ந்து திரும்பிச் சென்றனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பொதுமக்கள் பொழுது போக்குவதற்கு கடற்கரை மட்டுமே உள்ளது. மேலும் கடலில் சிறிது தூரம் விசைப்படகு நிறுத்த கட்டப்பட்ட ஜெட்டிபாலம் உள்ளது. அதுவும் பழு தடைந்துள்ளது.
இதில் ஆபத்தை உணராமல் பலர் கடல் அழகை ரசிக்க ஜெட்டி பாலத்தில் நின்றும், தடுப்புச்சுவர் இல்லாத இடத்தில் கால்களை தொங்க விட்டும் உட்காரு கின்றனர். இதனால் அருகே உள்ள அழகப்பா பல்க லைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டண கடற்கரை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். வெளியூர்களில் இருந்து வந்த விருந்தாளிகளும், சுற்றுலாப்பயணிகளும் கடற்கரையைச் சுற்றிப் பார்க்க வருகை தந்தனர். அங்கும் விளையாட ஊஞ்சல் கிடைக்காமல் பலர் மணலில் உட்கார்ந்து திரும்பிச் சென்றனர்.
இதனால் தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் தொண்டியில் உள்ள நீண்ட கடற்கரையை சுத்தப்படுத்தி, அழகுபடுத்தி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.