என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செல்போன், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
- பிரதமரின் வேளாண் திட்டத்தில் 13-வது தவணை பெறுவதற்கு செல்போன், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்றும், நாைளயும் நடக்கிறது.
- இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நேரடியாக சந்தித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பி.எம்.கிஷான் திட்டம் எனப்படும் பிரதரின் கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இடு பொருள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 13-வது தவணை விரைவில் விடுவிக்கப்படவுள்ளது. 13-வது தவணை பணம் வரவு வைப்பதற்கு விவசாயிகள் தங்கள் கைபேசி எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்து ekyC பதிவேற்றம் செய்தால் மட்டுமே நிதியுதவி கிடைக்கும்.
முதுகுளத்தூர் வட்டாரத்தில் 2100 விவசாயிகளுக்கு eKYC இதுவரை செய்யப்படாமல் உள்ளது. கிராமங்கள் தோறும் இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நேரடியாக சந்தித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ekyC மூலம் கைபேசி எண்ணை இணைக்கும் பணியை பொது இ-சேவை மையங்கள் மற்றும் அஞ்சலகங்களில் மேற்கொள்ளலாம். விவசாயிகளுக்கு 13-வது தவணையை பெற்று வழங்குவதற்காக eKYC செய்து முடிக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஏதுவாக இன்றும், நாைளயும்(19, 20-ந்தேதிகளில்) முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் eKYC செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முதுகுளத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.