என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடுகள் தீவிரம்
- நாளை பக்ரீத் பண்டிகை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
- குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை ஜூன் (29-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
ராமநாதபுரத்தில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா மைதானத்தில் நடை பெறுவது வழக்கம். இந்த முறை சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மைதானம் ஈரமாக இருப்பதால் இங்கு நடைபெற இருந்த தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக நகர் முழுவதும் ஆங்காங்கே அமைந்துள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொழுகை முடிந்ததும் குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.
நாளை காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் பள்ளிவாசல்கள் மற்றும் திறந்த வெளி மைதானங்க ளிலும் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. சொந்த ஊர்களில் நடைபெறும் தொழுகையில் கலந்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடவும், வளை குடா நாடுகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக மக்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.