search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம்
    X

    ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.

    ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம்

    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட ரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சி தலைவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பேசியதாவது:-

    பொதுமக்களுக்கு தேவை யான குடிநீர், ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு பகுதிக்கு முழுமையான அளவு குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து செல்கிறது. ஆனால் கடைக்கோடி பகுதிகளுக்கு முழுமையாக செல்வ தில்லை.

    பொதுமக்களுக்கு முழுமையான அளவு தண்ணீர் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, ஊரக வளர்ச்சி துறை ஒருங்கி ணைந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் வறட்சி பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் திட்டமிடப் பட்டுள்ளன. அந்த வகையில் தற்பொழுது மேற்கொள்ள திட்டமிட்ட பணிகளை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள நிலவரப்படி ஒவ்வொரு ஊராட்சி மன்ற பகுதியில் எந்த அளவிற்கு தண்ணீர் கிடைக்கிறது?, எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? என்பதை திட்டமிட்டு ஆய்வு அலுவலர்கள் வருகையின் போது தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்க ளுடன் ஒருங்கி ணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனைத்து ஊராட்சி மன்றத் தலை வர்களும் மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை மேற்கொள்ள உறுதுணையாக இருப்பதுடன் அவர்களுக்கு குடிநீர் வடிகால் வாரியத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின் பகிர்மான கழகத்தினர் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

    திட்டமிட்டபடி பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் தொகை அடிப்படை யில் 2054-ம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்கும் வகையில் செயல்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் நீர்வள ஆதார திட்டத்துறையின் விஞ்ஞானிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து எடுத்துரைத்தனர்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் இளங்கோ வன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுந்தரேசன், திருப்புல்லாணி ஊராட்சி சேர்மன் புல்லாணி,பி.டி.ஓ.க்கள் கணேஷ்பாபு, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×