என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராமேசுவரத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்
- ஆனி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
- அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டு புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ராமேசுவரம்
தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள்.
குறிப்பாக மாதத்தில் வரும் அமாவாசை நாளில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவதுண்டு.
அதன்படி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு முதல் கார் ரயில் பஸ் மூலம் ஆயிரக்கணக்கானோர் ராமேசுவரத்திற்கு வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டு புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கடற்கரை முழுவதும் எங்கு பார்த்தா லும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமேசுவரம் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினர்.
அமாவாசையை முன்னிட்டு ராமநாதசாமி -பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.