search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தினம் அனுசரிப்பு
    X

    வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தினம் அனுசரிப்பு

    • வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பா.ஜ.க.சாா்பில் அரண்மனை முன்பு அவரது உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோனின் 265-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பா.ஜ.க.சாா்பில் அரண்மனை முன்பு அவரது உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    அந்த படத்துக்கு, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினா் சுப. நாகராஜன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தாா். வீரன் அழகுமுத்துக்கோன் வரலாற்றை விளக்கி, மாவட்ட பொருளாளா் தரணி முருகேசன் பேசினார். இதில் ராமநாதபுரம் நகா் தலைவா் நாகராஜன், மாநில மகளிரணி நிா்வாகி கலாராணி, மாநிலச் செயலாளர்கள் ரஜினி, காளீஸ்வரன், கவுன்சிலர் குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.சாா்பில் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டப் பொறுப்பாளருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நகராட்சி தலைவா் காா்மேகம் உள்பட பலர் கலந்து கொண்டு உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×