search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொசுக்கள்
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொசுக்கள்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் முன்வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • வீடு, கடைகளில் மட்டுமல்ல வெளியில் நின்றாலும் கொசுக்கடியின் தாக்கத்தை உணர முடிகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உருவாகி வரும் கொசுக்கள் சாக்கடையில் மட்டுமல்லாமல் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகி வேகமாக பரவுகிறது. இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

    டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா கொசுக்கடியால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். மழை இல்லாவிட்டாலும் அவ்வப்போது பெய்யும் மழையினால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து நோய்களை பரப்பும் வேலையை தொடங்கி விட்டன.

    வீடு, கடைகளில் மட்டுமல்ல வெளியில் நின்றாலும் கொசுக்கடியின் தாக்கத்தை உணர முடிகிறது. இதனால் வேலைகள் முடியும் முன்பு அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், உடல்வலி, போன்ற வியாதிகளும் வந்து மருத்துவமனை செல்லும் சூழல் உள்ளது.

    சிலர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகும் கொடுமையும் நடக்கிறது. கொசு ஒழிப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் பெரும்பாலான உள்ளாட்சிகளில் சாக்கடை, தண்ணீர் தொட்டிகள், குப்பைகள் அகற்றப்படாததால் நோய்களுக்கு அச்சாரம் போடப்படுகிறது

    கொசுத்தொல்லை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு ஊராட்சிகளில் மந்தநிலை காணப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளிலும் கொசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×