search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் வரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவோம்- பா.ம.க. அறிவிப்பு
    X

    கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அக்கிம்

    ராமநாதபுரம் வரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவோம்- பா.ம.க. அறிவிப்பு

    • ராமநாதபுரம் வரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவோம் பா.ம.க. அறிவித்துள்ளது.
    • ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ் முன்னிலை வகித்தார்.

    பின்னர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அக்கிம் நிருபரிடம் கூறியதாவது:-

    வருகிற 18,19 ஆகிய தேதிகளில் கவர்னர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த 23 ஆண்டுகால போராட்டமான கடலாடி ஒன்றியத்தை பிரித்து சிக்கலை தலைமையிடமாகக் கொண்ட புதிய யூனியன் அமைத்தல், மக்களுக்கு இடையூறாக இருக்கும் கலெக்டர் அலு வலகம் முன்புள்ள மதுக்கடையை மாற்றுதல், ராமநாதபுரத்தில் புதிய மிகப்பெரிய மக்கள் தொகைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்க வேண்டும்.

    தற்போதிருக்கும் பஸ் நிலைய விரிவாக்கத்தை தடை செய்தல், திருவாடானை தாலுகா சிறுகம்பையூர் பகுதி யில் நடத்தப்படும் மணல் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை கண்டு கொள்ளாத நிலையிலும் ஜனநாயக முறையில் எத்த னையோ போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி னாலும் வேடிக்கைக்காக நடத்துவது போல பார்ப்பதும், எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற முயற்சி எடுக்கா மல் இருப்பதால் கவர்னர் ரவி வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எங்கள் கோரிக்கையை செவி சாய்க்காமல் இருக்கும் தமிழக அரசு மற்றும் தலைமையில் 1000 கருப்பு பலூன்க ளையும் பறக்கவிட்டு கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராகிம், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் பாலா, மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×