search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா?
    X

    கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா?

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியத்தில் 429 ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    தமிழகத்தில் நகரங்களை போல் கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி சாலைகளும், வீதிகளும் உருவாகி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி சாலைகள் அமைக்கப் படுகிறது.

    பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மழை நீர், கழிவு நீர் செல்ல போதிய கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    மழைக்காலங்களில் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. கால்வாய்கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானங்களை மட்டும் போட்டு வைத்துக் கொண்டு தடுமாறுகின்றன.

    எனவே கால்வாய் இல்லாத கிராமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான கால்வாய்களை அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    கிராம ஊராட்சிகளில் கால்வாய் பணிகள் விரைவில் நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    Next Story
    ×