என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை டோக்கன் விநியோகம்
- மண்டபத்தில் மகளிர் உரிமைத்தொகை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
- ரேசன் கடைபொறுப்பாளர் சந்திரசேகர் குடும்ப தலைவிகளின் பெயர்களை பதிவு செய்தார்.
மண்டபம்
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.அதனையொட்டி கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பதிவாளர் அளவில் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், டோக்கன் வழங்குதல், சேமிப்பு கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் தொடங்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி 11-வது வார்டு சேது நகரில் 150 ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், டோக்கன் கவுன்சிலர்கள் முபாரக், முகமது மீரா சாகிப், சாதிக் பாட்சா ஆகியோர் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது. ரேசன் கடைபொறுப்பாளர் சந்திரசேகர் குடும்ப தலைவிகளின் பெயர்களை பதிவு செய்தார். இந்த விண்ணப்ப படிவங்களை நிறைவு செய்து குடும்ப தலைவிகள் வார்டுகளில் நடக்கும் சிறப்பு முகாமின் போது அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.