search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    312 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு
    X

    312 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
    • இந்து முன்னணி மாவட்ட தலைவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 312 சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இன்று காலை கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

    ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோவில், மண்டபம், தேவிபட்டினம், கீழக்கரை சக்தி விநாயகர் கோவில், ஏர்வாடி வெட்டமனை, தொத்தன் மகன்வாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    உலக நன்மை வேண்டியும் கல்வி, குடும்பம், திருமண தடை ஆகியவைகள் நீங்கி சிறப்படைய கூட்டுப்பிராத்தனையும் கோவில்களில் நடந்தது. தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    ராமநாதபுரம் போலீஸ் சப் டிவிசனில்-65, பரமக் குடி-67, கமுதி-17, ராமேசு வரம்-103, கீழக்கரை 35, திருவாடானை-14, முது குளத்தூர் போலீஸ் சப் டிவிசனில் 11 என மாவட் டத்தில் மொத்தம் 312 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாலை யிலேயே வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர். பின்னர் விநாய கருக்கு உகந்த சுண்டல், கொழுக்கட்டை, கடலை, பொங்கல் அவல், பொரி போன்ற பொருட்களை வைத்து படைய லிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை உத்தரவின்படி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நேற்று மாலை முதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராம மூர்த்தி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்ஏற்பாடு பணிகளை செய்து வருகிறார்.

    பின்னர் அவர் கூறுகையில், நாளை 19-ந்தேதி ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன், மண்டபம், பரமக்குடியில் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் 20-ந்தேதி தேவிபட்டினம், திருப்புல்லாணி, ஏர்வாடி, சாயல்குடி, திருப்பாலைக் குடி ஆகிய பகுதிகளில் ஊர்வலம் நடைபெறும் என்றார்.

    Next Story
    ×