search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு
    X

    2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு 9 ஆயிரத்து 990 பேர் எழுதுகின்றனர்.
    • தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் 2022-ம் ஆண்டி ற்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் 3-ம் பாலினம்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு 10 தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 990 (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பதாரர்களுக்கு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

    தேர்வு எழுதும் மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு கடிதம் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    எழுத்து தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்ப தாரர்கள் காலை 8.30 மணி முதல் தங்களுக்குரிய தேர்வு மையத்தில் அனு மதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கும். எக்காரணத்தை கொண்டும் காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள்.

    விண்ணப்பதாரர்கள், தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் தேவையற்ற பொருட்கள் தேர்வு மையத்திற்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது.

    விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அழைப்பு கடிதம், நீலம் அல்லது கருப்பு நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா மற்றும் அட்டை, ஒரு புகைப்படம், ஏதேனும் ஒரு அடையாள அட்டை ஆகியவை மட்டும் கொண்டு செல்ல அனு மதிக்கப்படும்.

    தேர்வு மையங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும். தேர்வு மையங்களில் காப்பி அடிப்பது, ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றபடுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×