என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஹரிவராசனம் நூற்றாண்டு விழா, குரு வந்தனம்
- வருகிற 11-ந் தேதி நடக்கிறது
- ஐயப்ப பக்தர்கள் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்
ராணிப்பேட்டை:
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் வேலூர் மண்டலத்தில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மற்றும் குரு வந்தனம் அழைப்பு நிகழ்ச்சி வருகிற ஜூன் 11-ந்தேதி ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள ரமணி சங்கர் மஹாலில் நடைபெறகிறது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகள் சேவா சமாஜத்தின் நிர்வாகிகள், குருமார்கள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாநில நிர்வாகிகள், குருமார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர், ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு தேசிய கமிட்டி நிர்வாகிகள், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ தேசிய பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஐயப்ப பக்தர்கள் என 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த தகவலை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வட தமிழ்நாட்டின் மாநில தலைவரும் சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமியுமான ஜெயச்சந்திரன் ெதரிவித்துள்ளார்.