என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
வாலாஜா மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் வருகின்ற 18-ந்தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வாலாஜாப்பேட்டை நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன், தாசில்தார் நடராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.