என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்அடிப்படையில் வருகிற 2-ந் தேதி அன்று ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணி ப்பேட்டையில் ஆற்காடு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் செயல்படும் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுப வர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது எனவும் கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.