search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆதிதிராவிட பெண்கள் பள்ளியில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு
    X

    அரசு ஆதிதிராவிட பெண்கள் பள்ளியில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு

    • காசோலை வழங்குதல் மற்றும் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது
    • 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

    அரக்கோணம்:

    மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை (செல்ப்) சார்பில் அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வெற்றி நம் கைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் காசோலை வழங்குதல் மற்றும் மரங்கள் நடும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செல்ப் அறக்கட்டளை நிறுவனர் ச.வேலாயுதம் தலைமை தாங்கினார். செல்ப் செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார். பொருளாளர் ச.கருணாகரன், ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் முருகன், சாரண சாரணியர் திட்ட அலுவலர் ரஜினிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.கௌதம் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

    இதைத்தொடர்ந்து கார்பரேட் பயிற்சியாளர் லயன் அமுதா மதியழகன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக ரயில் பயணிகள் சங்கத்தலைவர் நைனாமாசிலாமணி, அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் தேவாசீர்வாதம், ஆலோசகர் துரை பாண்டியன், அறம் கல்வி சங்க தலைவர் டாக்டர் கலைநேசன், குளோ ஜேம்ஸ், கிறிஸ்து அறக்கட்டளை அருள்தாஸ் மற்றும் ச.சி.சந்தர், அம்பேத்ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் காசோலை வழங்கியும், 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களை பாராட்டியும் பேசினார். இறுதியாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தோத்திராவதி நன்றி கூறினார்.

    Next Story
    ×