search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.13 கோடியில் மேம்பாலம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    வாலாஜாவில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை படத்தில் காணலாம்.

    ரூ.13 கோடியில் மேம்பாலம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • கோவிலை இடிக்க எதிர்ப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகளும் உள்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த மருத்துவமனை சாலையின் இருபக்கமும் கட்டிடங்கள் உள்ளன. நோயாளிகள் சாலையை கடக்கும் போது அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.

    கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் சிரமப்பட்டு பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    அதன் அடிப்படையில் ரூ.13.½ கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதன் ஆரம்ப கட்ட பணி தொடங்கப்படுகிறது.

    அதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் வரை சாலையை விரிவுபடுத்துவதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் ஓரம் உள்ள கடைகள் மற்றும் பயனியர் நிழல் கூடம் போன்றவற்றை அகற்றினர். சாலை ஓரம் இருந்த பழமையான நாகம்மன் கோவில் முன்பு உள்ள மண்டபம் மற்றும் கோவில் பூஜை சாமான்கள் வைக்கும் அறை போன்றவற்றை அகற்றினர்.

    கோவிலின் கருவறை இடிக்க முற்பட்டபோது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலால் நெடுஞ்சாலை துறைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வாதிட்டனர்.

    இன்ஸ்பெக்டர் காண்டீபன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கோவில் இடிக்கும் பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    Next Story
    ×