என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் அருகே புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை திறப்பு- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
- பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே ஜக்கம்மாள்புரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில், அங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில், ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அங்கு செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வந்து, பள்ளியில் 81 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பழைய நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும், வள்ளி நாயகிபுரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு எம்.எல்.ஏ. விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வீரபாண்டியபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் அனைத்து துறைகள் பங்கேற்கும் சிறப்பு முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, முதல்-அமைச்சரின் மானாவாரி வேளாண்மை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2500 மதிப்பிலான நியூட்ரிசாப் பயிர் பூஸ்டர் டானிக் மற்றும் கம்பு செயல் விளக்கத்திடல் திட்ட பயனாளிகளுக்கு ஹெக் டருக்கு ரூ.6000 மதிப்பிலான இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பேசினார்.
வேளாண்மை உழவர் நலத்துறை நலத்துறை சார்பில் கருத்து கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. முகாமில் விவசாயிகளிடம் தேவை குறித்த மனு பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன், வேளாண் உதவி இயக்குநர் கீதா, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகப் பிரியா, லக்கம்மாள், ஜக்கம்மாள்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் சிவகுரு, செயலாளர் பார்த்திபன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பா ளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்