என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியில் ராமாயண ஏடு வாசிப்பு
- ஆடி மாதத்தின் தொடக்கமான நேற்று லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலின் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
- லட்சுமி யம்மன் கோவில், கீழநவ்வ லடிவிளை நாராயணசாமி கோவில் ஆகிய இடங்களிலும் ராமாயணம் வாசித்தல் தொடங்கியது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆடி மாதம் முழுவதும் தினசரி இரவு ராமாயண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதன்படி ஆடி மாதத்தின் தொடக்கமான நேற்று லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலின் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
கோவில் நிர்வாகிகள் தன சேகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ராஜேஷ், பிரகாஷ், பால்பாண்டி, பேச்சிமுத்து ஆகியோர் ராமாயண ஏடு வாசிப்பை தொடங்கினர். இதேபோல் லட்சுமி யம்மன் கோவில், கீழநவ்வ லடிவிளை நாராயணசாமி கோவில் ஆகிய இடங்களிலும் ராமாயணம் வாசித்தல் தொடங்கியது.
பேயன்விளை ராமர் கோவிலில் நடந்த நிகழ்ச்சி க்கு ஊர் பிரமுகர்கள் ராஜாமணி, அரசகுரு, அழகேசன், ராஜேஷ், சந்திரசேகரன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகணேசன் ராமாயண ஏடு வாசிப்பை தொடங்கி வைத்தார். தங்க கண்ணன் பூஜை வழி பாடு நடத்தினார். ஊர் தலைவர் கோபிகிருஷ்ணன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.