search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி பேருந்து நிலையத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல் பணிகள்
    X

     தருமபுரி பேருந்து நிலைய வளாகத்தில் நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள் புனரமைத்தல் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    தருமபுரி பேருந்து நிலையத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல் பணிகள்

    • ASTC நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.
    • ரூ.36.62 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டடத்தினை அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்

    தருமபுரி,

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தருமபுரி மாவட்டத்தில் ரூ.38.71 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டடம், நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை அடிக்கல் நாட்டி வைத்து, ASTC நகர் பூங்காவினை திறந்து வைத்தார். இந்நிகழ்வு களுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி, முன்னிலை வகித்தார்.

    தருமபுரி மாவட்டம், ASTC நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

    மேலும், சட்டமன்ற அறிவிப்புகள் 2022-2023படி பழைய பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்ய ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தருமபுரி பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள் புனரமைத்தல் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.36.62 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டடத்தினை அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்.

    இந்நிகழ்வின்போது, பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தீபனாவிஸ்வேஸ்வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்றத்தலைவர் லட்சுமி, தருமபுரி நகர்மன்ற துணைத்தலைவர் நித்தியா அன்பழகன், தருமபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, தருமபுரி நகராட்சி பொறியாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×