search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணி விழிப்புணர்வு குறித்து  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குறும்படம் போட்டி
    X

    தூய்மை பணி விழிப்புணர்வு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குறும்படம் போட்டி

    • பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனிநபர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்படம் தயாரிக்கும் போட்டிகள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
    • 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்களுக்கு மிகாமல் ஒளிபரப்பு ஆகும் வகையில் இசையுடன் கூடிய பாடல் அடங்கிய குறும்படம் தயாரித்து வழங்கப்பட வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகராட்சியில் பொதுமக்களின் பங்களிப்பு டன் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் வகையில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனிநபர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்படம் தயாரிக்கும் போட்டிகள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. தூய்மைக்கான மக்கள் இயக்கம் பற்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் நடக்கிறது.

    எனது குப்பை எனது பொறுப்பு அல்லது எனது நகரம்- எனது பெருமை ஆகிய ஏதாவது ஒரு தலைப்பில் 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்களுக்கு மிகாமல் ஒளிபரப்பு ஆகும் வகையில் இசையுடன் கூடிய பாடல் அடங்கிய குறும்படம் தயாரித்து வழங்கப்பட வேண்டும். குறும்படம் தயாரித்து வழங்கப்பட்டதில் சிறப்பாக தயாரித்து அனுப்பி உள்ள குறும்படங்கள் தேர்வு குழுவினர் மூலம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

    எனவே, குறும்படங்களை தயாரித்து வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் மாநகராட்சி மைய அலுவலக தரை தளத்தில் உள்ள மாநகர நல அலுவலர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×