search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியீடு
    X

    கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவிகள்.

    பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியீடு

    • பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியீடு சேலம் மாவட்டத்தில் 88.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    தேர்வு முடிவு வெளியீடு

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இன்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பிளஸ்-1 தேர்வு முடிவை வெளியிட்டனர். அதில், 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வழக்கமாக மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 15 ஆயிரத்து 879 பேர் மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    88.62 சதவீதம் தேர்ச்சி

    அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். அதில் மாணவர்கள் 82.47 சதவீதமும், மாணவிகள் 94.47 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளில் எண்ணிக்கை 114 ஆகும். 2020-ம் ஆண்டு 105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. ஆனால் 2021-2022 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கொண்டாட்டம்

    முன்னதாக இன்று காலை 9.30 மணி அளவில் 325 பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவு மதிப்பெண் விபரங்களுடன் ஒட்டப்பட்டது. தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவ- மாணவிகள் தங்களுடைய பிளஸ்-1 மதிப்பெண் விபரங்களை அறிந்து கொண்டனர்.

    பள்ளிக்கல்வித் துறையின் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்திலும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் மாணவ- மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். வாயிலாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்பட்டது.

    பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ெசலுத்தி மாணவ- மாணவிகள் தாங்கள் எடுத்த மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர். மேலும் மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுத்துக்கொண்டனர்.

    பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் தங்கள் வகுப்பறைகளில் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர், ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×