search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டல் மேலாண்மை நுழைவு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியீடு
    X

    ஓட்டல் மேலாண்மை நுழைவு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியீடு

    • சேலம், நாமக்கல் மாணவர்கள் எழுதிய மத்திய அரசின் ஓட்டல் மேலாண்மை நுழைவு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிட்டது.
    • இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 4.2.2022 தொடங்கி, 3.5.2022 அன்று முடிவடைந்தது.

    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பி.எஸ்.சி. (உபசரிப்பு மற்றும் ஓட்டல் மேலாண்மை) படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவுத் தேர்வு -2022 அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந்தேதி மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

    இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு 4.2.2022 தொடங்கி, 3.5.2022 அன்று முடிவடைந்தது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ்-2 மாணவ- மாணவிகள் பலர் விண்ணப்பித்தனர்.

    கடந்த 18-ந்தேதி தேசிய கவுன்சில் ஓட்டல் மேலாண்மை நுைழவு தேர்வு கணினி வழியாக நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, ேகாவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சேலம், நாமக்கல் மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கோவையில் உள்ள மையத்தில் தேர்வு எழுதினர். தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது.

    தற்காலிக விடைகள் வெளியீடு

    இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் கேள்வித்தாளில் பதிவு செய்த பதில்களுடன் தற்காலிக விடைகள் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பதிவு எண், கடவு சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தாங்கள் எழுதியுள்ள விடைகள், கேள்விகளுக்கு என்.டி.ஏ . வழங்கியுள்ள விடைகள் ஆகியவற்றை பார்க்கலாம். அதில் விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதி உள்ள விடைகள் சரியாக உள்ளதா? எனவும் சரிபார்த்து கொள்ளலாம்.

    என்.டி.ஏ. வழங்கிய உள்ள விடைகள் தவறாக இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரங்களுடன் ஒரு கேள்விக்கு ரூ.200 செலுத்தி இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும். அதை பாட வல்லுநர் குழுவால் சரிபார்க்கப்படும்.

    சரியானது என கண்டறியப்பட்டால், விடை குறிப்பு அதற்கேற்ப திருத்தப்படும்.

    திருத்தப்பட்ட இறுதி விடைக்குறிப்பின் அடிப்படையில், முடிவு தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். நிபுணர்களின் முடிவே இறுதியானது. இந்த தகவலை மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×