search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்
    X

    சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

    சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

    • சீர்காழி பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50 பேருக்கு நிவாரண உதவிகள்.
    • ரூ.2ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை, போர்வை ஆகியவற்றை வழங்கினார்.

    சீர்காழி:

    விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் 50-வது பொன்விழாவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன் ஒருபகுதியாக சீர்காழி பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.வி.ராதா–கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் அனிதா, குடசமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் பிரவின்வசந்த், அனுஷாபிரவின், அலெக்சாண்டர், ரீனிஷாஜேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து கே.வி.ராதாகிருஷ்ணன், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.2ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை, போர்வை ஆகியவற்றை வழங்கினார்.

    இதில் அரசு பள்ளி ஆசிரியர் கோவி.நடராஜன் பங்கேற்றார்.

    முன்னதாக பள்ளி முதல்வர் ஜோஸ்வா–பிரபாகரசிங் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் சரோஜா நன்றிக் கூறினார்.

    Next Story
    ×