என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இடையிறுப்பு அருகே பாப்பா வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்
- பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
- ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக இடையிறுப்பு பகுதியில் பல மணிநேரமாக பதற்றமாக காணப்பட்டது.
மெலட்டூர்:
மெலட்டூர் அருகே உள்ள இடையிருப்பு வருவாய் கிராமத்தில் பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கிரா மமக்கள், வருவாய்துறை. மற்றும் பொதுப்பணித்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
பாபநாசம் மண்டல துணை தாசில்தார் விவேகானந்தன்,பொதுப்ப ணித்துறை உதவி பொறியாளர் செல்வபாரதி, பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், இளமாறன் மற்றும் கிராமமக்கள் முன்னிலையில் வட்ட அளவையர்கள் மம்தாபீவி, அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சர்வே செய்யப்பட்டது பின்னர் பாப்பா வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
உடன் வருவாய்ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அதிகாரி கார்த்தி மற்றும் வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் கிராமமக்கள் பலர் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக இடையிறுப்பு பகுதியில் பல மணிநேரமாக பதற்றமாக காணப்பட்டது. பதற்றத்தை தணிக்க பாபநாசம், மெலட்டூரை சேர்ந்த போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.