search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தி நினைவுச் சின்னம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    காந்தி நினைவுச் சின்னம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.
    • சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையம் அருகே , காந்தியின் "சத்திய சோதனை " நினைவுச் சின்னம் உள்ளது. மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.

    அவ்வாறு அவர் சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. இது குறித்து மாலைமலர் நாளிதழில் கடந்த மாதம் 26- ந் தேதி செய்தி வெளி யானது. இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று அங்கு பார்வையிட்டு ஆய்வு நடத்தி னர். தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    மேலும் நடவடிக்கைகள் எடுத்து, காந்தியின் வரலாற்று நினைவுச் சின்னம் பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×