என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இடங்கணசாலை நகராட்சி பகுதியில் சாலை அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Byமாலை மலர்1 April 2023 3:15 PM IST
- 22 மற்றும் 23- வது வார்டு சுமங்கலி சில்க்ஸ் பிரிவு சாலையிலிருந்து, பாப்பாபட்டி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையினை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
- சாலை குறுகிய அளவில் இருந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தன.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 22 மற்றும் 23- வது வார்டு சுமங்கலி சில்க்ஸ் பிரிவு சாலையிலிருந்து, பாப்பாபட்டி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையினை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலை குறுகிய அளவில் இருந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தன.
இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்து அப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது . இதனை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
Next Story
×