search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    கடை வீதியில் பழக்கடையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. 

    கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • ஆக்கிரமிப்புகளினால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் கடை வீதிகளில் சாலையின் இருமருங்கிலும் ஆக்கிரமிப்புகள் அதிக ரித்து வருவதாகமாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    இந்த ஆக்கிர மிப்புகளால் கடைவீதி பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது.

    பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக அதனை அகற்றி பொதுமக்கள் இடையூறின்றி வந்து செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்–பட்டதை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் அறிவிப்பு செய்திருந்தார்.

    ஆனாலும் கடைவீதிகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.

    அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு ஆங்கிருப்புகளை அகற்றினர்.

    ஆக்கிரமிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் நகராட்சி அலுவலக வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்புகளை முன்னிட்டு கடைவீதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்–பட்டிருந்தது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றியதற்கு பிறகு திருவாரூர் கடைவீதி விசாலமான அகலத்தில் காணப்பட்டது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப ட்டதால் பொது மக்கள் இடையூறின்றி பொருட்களை வாங்கி வர செல்ல முடிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டது.

    Next Story
    ×