search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் அகற்றப்பட்ட விநாயகர் கோவில்களை மீண்டும் அமைக்க கோரி இந்து முன்னணியினர் மனு
    X

    இந்து முன்னணி நிர்வாகிகள் மேயர் சரவணனிடம் மனு அளித்த காட்சி.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் அகற்றப்பட்ட விநாயகர் கோவில்களை மீண்டும் அமைக்க கோரி இந்து முன்னணியினர் மனு

    • நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • பஸ் நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பஸ் நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர் பார்த்து காத்திருக்கின்ற னர்.

    இந்த நிலையில் பழைய பஸ் நிலையம் இருந்தபோது அதன் முன்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாக்கிய விநாயகர் மற்றும் கல்யாண விநாயகர் என்ற இரண்டு விநாயகர் கோவில் இருந்தது.

    பஸ் நிலையத்தை இடிக்கும் போது அப்போ தைய கமிஷனர் மீண்டும் விநாயகர் கோவில் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.இது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் கடந்த 2021 மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி ஆகிய 2 நாட்களிலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகி யோரிடம் மனு அளிக்கப் பட்டது.

    அந்த மனுவில் இடிக்க ப்பட்ட 2 விநாயகர் கோவி லையும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று இந்து முன்னணி நிர்வாகிகள் மேயர் சரவணனிடம் மனு அளித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் வந்த இந்து முன்னணியினர் அளித்த மனுவில், மாநகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டர் ஆகியோர் பஸ் நிலையம் கட்டும் பணி முடிந்த பிறகு கோவில் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

    ஆனால் எந்த இடத்தில் கோவில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் 2 விநாயகர் கோவில்களையும் அமைத்து தர வேண்டும். அதற்கு விரைவாக இடத்தை ஒதுக்கீடு செய்து கோவில் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    அதனை வாங்கி படித்து பார்த்த மேயர் சரவணன் இந்து முன்னணி கோரிக்கை கண்டிப்பாக நிறை வேற்றப்படும். பஸ் நிலையம் கட்டி முடிப்பதற்குள் அந்த இடத்தை ஆய்வு செய்து பாக்கிய விநாயகர் மற்றும் கல்யாண விநாயகர் ஆகிய 2 கோவில்களும் கண்டிப் பாக அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    Next Story
    ×