search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி
    X

    குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர்.

    குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

    • மழை பெய்யும் நேரங்களில் எல்லாம் குடியிருப்புகளை சுற்றி மற்றும் தெரு முழுவதும் மழைநீர் தேங்கும்.
    • தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேங்கி கிடக்கும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என அச்சப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே மருங்கை சாலையில் அருமை நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு மழை பெய்யும் நேரங்களில் எல்லாம் குடியிருப்புகளை சுற்றி மற்றும் தெரு முழுவதும் மழைநீர் தேங்கிகிடப்பது தொடர் கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் அருமை நகரில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கியது.

    இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து கடும் சிரமத்திற்கு இடையே வெளியே வந்தனர். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேங்கி கிடக்கும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அருமை நகரை சேர்ந்தகார்த்திக் கூறும்போது, எங்கள் பகுதியில் மழைக்கா லங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    தேங்கி கிடக்கும் தண்ணீரில் இருந்து விஷ பூச்சிகள் வீட்டுக்கு ள் வருவதால் அச்சத்தில் உள்ளோம். எங்கள் பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் தேங்குகிறது.

    எனவே மழைநீர் வாய்க்காலை தூர்வாரி மழைநீர் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×