search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- கிராம சபை கூட்டத்தில் ரேசன் கார்டை ஒப்படைப்பதாக தீர்மானம்
    X

    பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- கிராம சபை கூட்டத்தில் ரேசன் கார்டை ஒப்படைப்பதாக தீர்மானம்

    • கொடூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • ஊராட்சி செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடூர் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கொடூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறாததால் மீஞ்சூர் ஒன்றிய பற்றாளர் முத்துலட்சுமி தலைமையில் கொடூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேசன் கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    மேலும் கிராம சபை கூட்டத்தை பார்வையிடுவதற்காக வந்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

    இதில்முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பானு பிரசாத், முன்னாள் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், ஊராட்சி செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×