search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் ஏற்படும் அபாயம்: அதிகாரிகள் இல்லாததால் தொடரும் அவலம்
    X

    குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் ஏற்படும் அபாயம்: அதிகாரிகள் இல்லாததால் தொடரும் அவலம்

    • பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது.
    • மக்கள் குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சில் 30 வார்டுகள் உள்ளன. இதில் நெல்லிக்குப்பத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 9-வது வார்டில் கந்தசாமி தெரு, ராமு தெரு, விஜயலட்சுமி நகர், பங்களா தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து குடிநீரை பிடித்த போது கடும் துர்நாற்றம் வீசி வந்தது.

    தொடர்ந்து வார்டு கவுன்சிலர் சத்யா மற்றும் பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடி நீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொது மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற நோய் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக கூறி புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து புகார் அளித்த சிறிது நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் நெல்லிக்குப்பம் பகுதியில் 5 இடங்களில் பள்ளங்கள் தோண்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று சரி செய்யும் பணியினை ஆய்வு செய்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் சரி செய்து சில நாட்களான நிலையில் மீண்டும் விஜயலட்சுமி நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் இதுபோன்று தொடர்ந்து குடிநீர் வந்தால் எப்படி மக்கள் குடிப்பது? இதனை குடித்தால் கண்டிப்பாக உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது என சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தனர். மேலும் இது சம்பந்தமாக அதிகாரியிடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று அதிகாரிகள் அலட்சியத்தால் கழிவு நீர் கலந்த குடிநீர் வருவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொது மக்கள் தெரி வித்துள்ளனர்.

    ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சியில் சில அதிகாரிகள் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் புதிய அதிகாரிகள் நிய மிக்கப்படாததால் இது போன்ற அத்தியாவசிய பணி களை யார் மேற்கொள்வது? என தெரி யாமல் நகரா ட்சி நிர்வாகம் உள்ளது. மேலும் போதுமான பணியாளர்களும் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் சீர்குலைந்து வருகின்றது. இது போன்ற மக்களுக்கு தேவையான அத்தியாவசிய குடிநீர் சரி செய்யாமல் தொடர்ந்து வருவதால் மிகப் பரிய உயிரிழப்பு சம்பவம் நடைபெற்று விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்க தாகும். இதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்களா?

    Next Story
    ×