என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணகுடியில் சாலை விபத்தில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் படுகாயம்

- விடுமுறை தினம் என்பதால் நண்பர் வீட்டு இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள நெரிஞ்சி காலனியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சுனில் மாணிக்கபிரபு(வயது 17). அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் மகன் ஜான்சன்(17). இவரும், சுனில் மாணிக்கபிரபுவும் நண்பர்கள் ஆவர்.
பிளஸ்-2 மாணவர்கள்
இவர்கள் 2 பேரும் பணகுடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் நண்பர் வீட்டு இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
நேற்று இரவு தங்களது வீட்டுக்கு புறப்பட்ட அவர்கள் பணகுடியை அடுத்த தண்டையார்குளம் அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் சாலையின் குறுக்காக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
படுகாயம்
இதனால் சுனில் மாணிக்க பிரபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.