search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    சங்ககிரியில் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    சாலை பாதுகாப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சங்ககிரி ஆர்.எஸ். கட்டுமான அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சிக்கு சங்ககிரி அரசு மருத்துவமனை ஐ.சி.டி.சி ஆலோசகர் கோபால் தலைமை வகித்தார்.

    சங்ககிரி:

    தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சென்னை - கன்னியாகுமரி தொழில் தடத் திட்டம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சங்ககிரி ஆர்.எஸ். கட்டுமான அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு சங்ககிரி அரசு மருத்துவமனை ஐ.சி.டி.சி ஆலோசகர் கோபால் தலைமை வகித்தார். இதில் சாலை பாதுகாப்பு மற்றும் எய்ட்ஸ், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சங்ககிரி நெடுஞ்சாலைத் துறை துணை கோட்ட பொறியாளர் தாரகேஸ்வரன், துணை பொறியாளர் தினகரன், ஏ.ஜி.இ.இ.எஸ் கள மேற்பணியாளர் தேவன், கட்டுமான பொறுப்பாளர் மற்றும் முதுநிலை மேலாளர் முத்துக்குமரன் மற்றும் கட்டுமான பணியாளர்கள் சுமார் 150 பேர் இதில் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×