search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    தஞ்சை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    தஞ்சை கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார்.
    • அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் தஞ்சை ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் மருது பாண்டியர் கல்வி நிறுவ னங்களின் தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்ரமணி யன் மற்றும் மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் சிறப்பு லிருந்தினர்களாக தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    மேலும், சிறப்பு விருந்தினராக தாமரை இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் உறுப்பினர் ஜெயஸ்ரீபத்ரிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    அப்போது ரோட்டரி சங்கத்தின் பயன்பாடுகள் குறித்தும், மாணவர்களாகிய அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும் என எடுத்துரைத்தனர். மேலும், ரோட்டரி கிளப் துணை ஆளுநர் கருணா ரோட்டரி சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் பேசினார்.

    முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் ரோட்டரி கிளப் செயலாளர் தார்சியஸ் நன்றி கூறினார்.

    விழாவில் ஆசிப்அலி, விஜயகுமார், ரமேஷ்குமார், சங்காரம், கண்ணன், நரேஷ்குமார் ஆகிய ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மருது பாண்டியர் கல்லூரி ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் மற்றும் கல்லூரி மேலாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×