search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லம் ஒன்றியத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகள்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
    X

    சாலை விரிவாக்கப் பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    வல்லம் ஒன்றியத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகள்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

    • நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார்
    • நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம்-மேல் ஒலக்கூர். தொண்டூர் செல்லும் சாலையை ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிக்கும், நாட்டார்மங்கலம் தொண்டூர் சாலை பாலம் கட்டுதல் பணிக்கும், ரூ. 2 கோடி மதிப்பில் நாட்டார் மங்கலம் தொண்டூர் இடை யில் மேம்பாலம் கட்டும் பணிக்கும், மொடையூர் சாலை ரூ. 40 லட்சம் மதிப் பில் சீர் செய்யவும் ஜெயங் கொண்டான் பேரணி சாலையை ரூ. 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் விவாக்கம் செய்து புதிய தார் சாலை அமைப்பதற்கும் பூமி பூஜை விழா நாட்டா மங்கலம், புதுசொரத்தூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு வல்லம் ஒன்றிய தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியம்மாள் மாணிக்கம், அசோக் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பக்தவச்சலம், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் அக்பர் அலி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பணிகள் செய்வதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, துரை, இளம்வழுதி, இளநிலை பொறியாளர்கள் ஏழுமலை சேகர் மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பத்மநாபன், விஜயா கண்ணன், கலைவாணி கிருஷ்ணமூர்த்தி , சிலம்பரசி பாண்டியராஜன் அமைப்பு சாராதொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்வண்ணன், உள்ளிட் ேடார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×