search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.12 கோடி மதிப்பில் சாலை பணிகள்
    X

    கொரடாச்சேரியில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் துணைத்தலைவர் பாலச்சந்திரன் பேசுகிறார்.

    கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.12 கோடி மதிப்பில் சாலை பணிகள்

    • உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும்.
    • நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி வரவேற்றார். தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீன்குமார் படித்தார். கூட்டத்தில்

    நாகூரான்(அதிமுக): உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். அபிவித்தீஸ்வரம் மயாண கொட்டகையை சீரமைக்க வேண்டும்.

    சத்தியேந்திரன்(திமுக): எண்கண் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு புதிய திருமணமண்டபம் கட்ட ரூ.3 கோடி, கோயில் திருப்பணிகள் புனரமைக்க ரூ.1 கோடி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    ஏசுராஜ்( அதிமுக): பெரும்புகழூர் ஊராட்சி வெட்டாற்றில் ரூ 8 லட்சம் மதிப்பில் படித்துறை கட்டியதற்கு நன்றி. அதுபோல் எங்கள் வார்டின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வாசு(திமுக): காட்டூர் ஊராட்சியில் 3 சாலைகள், சமுதாயகூடம் பழுது நீக்கம் செய்ததற்கு நன்றி.

    மீரா(அதிமுக): மேலராதாநல்லூர் குழு கட்டிடம் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன்: கொரடாச்சேரி ஒன்றியத்தில் தேவைப்படும் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் ரூ.12 கோடி மதிப்பில் 28 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார். கூட்டத்தில் பொறியாளர்கள் ரவீந்திரன், சசிரேகா, வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் முரளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.

    Next Story
    ×