search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் ரூ.48.50 லட்சம் மதிப்பில் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
    X

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கட்டிடத்தை திறந்து வைத்த போது எடுத்த படம். 

    காயல்பட்டினத்தில் ரூ.48.50 லட்சம் மதிப்பில் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட அலியார் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு கூடுதல் வகுப்பறை வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    மேலும் காயல்பட்டினம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20.5 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    விழாவில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் துணை கலெக்டர் தாக்ரே சுபஞான தேவ்ராவ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அதிகாரி பொங்கலரசி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் பாஸ்கரன், இம்மானுவேல், காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் குமார்சிங், நகராட்சி தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, முக்காணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட தி.மு.க. இளை ஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடைசுகு, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாநில பொது குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மெஜல்லா பீரிஸ், நடுநிலைப்பள்ளி தலைமை யாசிரியர் புனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×