search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ 75ஆயிரம் வசூல்
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ 75ஆயிரம் வசூல்

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரி சனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவ குமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச் சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண் ணப்பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.74ஆயிரத்து 946 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவில் வளாகத்தில் வைக் கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    Next Story
    ×