என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயிலில் டிக்கெட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.12.2 கோடி அபராதம் வசூல்
- சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் டிக்கெட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.12.2 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
- கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5.1 கோடி மட்டுமே அபராதம் வசூலானது.
சேலம்:
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் தீவிரமாக டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோர், முறைகேடாக பயணிப்போர், லக்கேஜ் எடுக்காமல் இருத்தல் போன்றவற்றை கண்டறிந்து டிக்கெட் பரிசோதகர்கள் அபராதத்துடன் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் 9 மாத காலத்தில் டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.12 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்து 832 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5 கோடியே 1 லட்சத்து 90 ஆயிரத்து 508 மட்டுமே அபராதம் வசூல் ஆகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 69 சதவீதமாக அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.