என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41.50 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41.50 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/02/1830213-2mullakadu2.webp)
பொட்டல்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த புதிய பள்ளி கட்டுமான பணி நிகழ்ச்சியில், யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர், முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல், பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட காட்சி.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41.50 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பொட்டல் காட்டில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 3 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி ரூ. 41.50 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி:
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சி,பொட்டல் காட்டில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 3 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி ரூ. 41.50 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கான நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கி முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வரவேற்று பேசினார்.
தொடர்ந்து கட்டுமான பணிக்கான செங்கலை எடுத்து வைத்தார். முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ மாணவிகள் கைகளில் பூங்கொத்துடன் அணிவகுத்து நின்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தளவாய்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.