search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில்  643 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்
    X

    பாளையஞ்செட்டிகுளத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.  

    நெல்லை மாவட்டத்தில் 643 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்

    • அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகே தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நெல்லை:

    தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை நெல்லை மாவட் டத்திற்கு வருகை தந்தார்.

    உற்சாக வரவேற்பு

    அவருக்கு பாளை கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகே வைத்து தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மாவட்ட அவைத் தலைவர் கிரகாம் பெல், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பாளை யூனியன் சேர்மன் தங்க பாண்டியன், சித்திக், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக் கோட்டை செல்லத்துரை, மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், முன்னாள் துணைச் செயலாளர் நவநீதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் அனுராதா ரவி முருகன், ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், ஜோசப் பெல்சி, அருள்மணி, ராஜன், நிர்வாகிகள் வீர பாண்டி யன், ஆறுமுக ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் ஆய்வு

    அதனைத்தொடர்ந்து கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ண ப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெறும் பாளை யூனியன் பாளை யஞ்செட்டி குளம் பஞ்சாயத்து மற்றும் ரெட்டி யார்பட்டி பஞ்சாயத்துகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்கு மரக்கன்று கள் நட்டு வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உடன் இருந்தார். அதன் பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.

    நலத்திட்ட உதவிகள்

    அங்கு அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பில் 25 பயனாளிகளுக்கு உழவர் காசுக்கடன்கள் உள்பட மொத்தம் 643 பயனாளி களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போ தெல்லாம் அமைகிறதோ அப்போ தெல்லாம் மகளிருக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு மாவட்டத்தில் உள்ள 528 நியாய விலை கடைகள் மூலம் முதல் கட்டமாக 2.46 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, அதில் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு மையங்களில் பயனாளிகளால் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது வரை பெறப்பட்டுள்ளது.மீத முள்ள சுமார் 2 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×