என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேரன்மகாதேவி அருகே ரூ.51 லட்சம் மதிப்பிலான செல்போன் டவர் உபகரணங்கள் திருட்டு
- புதுக்குடி, கங்கனாங்குளத்தில் டவர் அமைந்துள்ள இடங்களை சேதுராமன் பார்வையிட்டார்.
- திருட்டு சம்பவம் குறித்து சேதுராமன் போலீசில் புகார் அளித்தார்.
நெல்லை:
சேரன்மகாதேவி அருகே உள்ள புதுக்குடியில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் சேரன்மகாதேவி- களக்காடு சாலையில் அமைந்துள்ள கங்கனாங்குளம் கிராமத்திலும் அதே நிறுவனத்திற்கு சொந்தமான டவர் உள்ளது.
இந்த நிறுவனத்தின் மேலாளராக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சேதுராமன் (வயது51) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நெல்லைக்கு வந்து ஆய்வு செய்த நிலையில் நேற்று புதுக்குடி மற்றும் கங்கனாங்குளத்தில் டவர் அமைந்துள்ள இடங்களை அவர் பார்வையிட்டார்.
அப்போது புதுக்குடியில் டவர் அருகே வைக்கப்பட்டி ருந்த ரூ.31 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான உபகர ணங்களும், கங்கனாங் குளத்தில் உள்ள ரூ.20 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பி லான உபகரணங்களும் திருட்டு போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த சேதுராமன் இந்த திருட்டு சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.51 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.