search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே துணிகரம் - பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.6 லட்சம் நகை கொள்ளை
    X

    நாங்குநேரி அருகே துணிகரம் - பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.6 லட்சம் நகை கொள்ளை

    • மூன்றடைப்பு கோவைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41). விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி.
    • சுப்பையா நேற்று விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்று விட்டார். அவரது மனைவி நேற்று மதியம் வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு கோவைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 41). விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி.

    சுப்பையா நேற்று விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்று விட்டார். அவரது மனைவி நேற்று மதியம் வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு, பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் பின்பக்க கதவை பூட்ட அவர் மறந்துவிட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின் பக்கம் வழியாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த வளையல், செயின், கை செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 16 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். நகையின் மதிப்பு சுமார் ரூ.6லட்சம் என்று கூறப்படுகிறது.

    சிறிது நேரம் கழித்து கிருஷ்ணவேணி மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த நகைகளையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ண வேணி நகைகள் திருடப்பட்டி ருப்பது குறித்து சுப்பையா விடம் தெரிவித்து ள்ளார். உடனே வயலில் இருந்து வந்த சுப்பையா மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதுதொட ர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி பட்டப்பகலில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கிருஷ்ணவேணி வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்பிய ஒரு மணி நேர இடைவெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Next Story
    ×