search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ருத்ர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
    X

    ருத்ர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    ருத்ர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

    • 22 அணிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
    • ஏராளமான பொதுமக்கள் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியின்படி மகா சிவராத்திரியை முன்னிட்டு ருத்ர நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் கலைப்பண்பாட்டுத் துறையுடன் இணைந்து மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி நிகழ்த்திய இவ்விழாவுக்கு, நாட்டியப்பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    விழாவில், கல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 22 அணிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்,

    இதில், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், வணிகர் சங்க பிரமுகர் ஏடிஎஸ்.தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ரியாத், ஜம்புகென்னடி, சூர்யா, நவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, பரத நாட்டியக் கலைஞர்களை பாராட்டினர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×